தேசீய கீதங்கள்

6. பிறநாடுகள்

51.பெல்ஜியத்திற்கு வாழ்த்து

துணிவினால் வீழ்ந்து விட்டாய்!
தொகையிலாப் படைக ளோடும்
பிணிவளர் செருக்கி னோடும்
பெரும்பகை எதிர்த்த போது
பணிவது கருத மாட்டாய்;
பதுங்குதல் பயனென் றெண்ணாய்;
தணிவதை நினைக்க மாட்டாய்
‘நில்’லெனத் தடுத்தல் செய்தாய்.
5
ADVERTISEMENTS

வெருளுத லறிவென் றெண்ணாய்;
வித்தையோர் பொருட்டாக் கொள்ளாய்;
சுருளலை வெள்ளம் போலத்
தொகையிலாப் படைகள் கொண்டே
மருளுறு பகைவர் வேந்தன்
வலிமையாற் புகுந்த வேளை
"உருளுக தலைகள், மானம்
ஓங்குகெ"ன் றெதிர்த்து நின்றாய்.
6

யாருக்கே பகையென் றாலும்
யார்மிசை இவன்சென் றாலும்
ஊருக்குள் எல்லை தாண்டி
உத்தர வெண்ணி டாமல்,
போருக்குக் கோலம் பூண்டு
புகுந்தவன் செருக்குக் காட்டை
வேருக்கும் இடமில் லாமல்
வெட்டுவேன் என்று நின்றாய்,
7
ADVERTISEMENTS

வேள்வியில் வீழ்வ தெல்லாம்
வீரமும் புகழும் மிக்கு
வீள்வதுண் டுலகிற் கென்றே
வேதங்கள் விதிக்கும் என்பார்;
ஆள்வினை செய்யும் போதில்
அறத்திலே இளைத்து வீழ்ந்தார்
கேள்வியுண் டுடனே மீளக்
கிளர்ச்சிகொண் டுயிர்த்து வாழ்தல்.
8

விளக்கொளி மழுங்கிப் போக
வெயிலொளி தோன்று மட்டும்,
களக்கமா ரிருளின் மூழ்குங்
கனகமா ளிகையு முண்டாம்;
அளக்கருந் தீதுற் றாலும்
அச்சமே யுளத்துக் கொள்ளார்,
துளக்கற ஓங்கி நிற்பர்;
துயருண்டோ துணிவுள் ளோர்க்கே?
9
ADVERTISEMENTS
மாகாளி பராசக்தி உருசியாநாட்
டினிற்கடைக்கண் வைத்தாள்,அங்கே
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி!
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்!
வாகான தோள்புடைத்தார் வானமரர்;
பேய்களெ லாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண்புகைந்த மடிந்தனவாம்;
வையகத்தீர்,புதுமை காணீர்!
1