தேசீய கீதங்கள்

4.தேசிய இயக்கப் பாடல்கள்

32. சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது

பிச்சைவாழ் வுகந்து பிறருடை யாட்சியில்
அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன்.

புன்புலால் யாக்கையைப் போற்றியே தாய்நாட்டு
அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன்.

மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்
75
ADVERTISEMENTS
ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன்.

ஆரியத் தன்மை அற்றிடுஞ் கிறியர்
யாரிவன் உளரவர் யாண்டேனும் ஒழிக!

படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக்
கடைபடு மாக்களென் கண்முன்நில் லாதீர்!
80

சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப
மாதரார் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க!

நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான்
வீடுசென் றொளிக்க விரும்புவோன் விரும்புக!

தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின்
85
ADVERTISEMENTS
பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க!

நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு
ஊட்டுதல் பெரிதென உன்னுவோன் செல்க!

ஆணுருக் கொண்ட பெண்களும் அலிகளும்
வீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன்
90

ஆரியர் இருமின்!ஆண்கள் இங்கு இருமின்!
வீரியம் மிருந்த மேன்மையோர் இருமின்!

மானமே தெரிதென மதிப்பவர் இருமின்!
ஈனமே பொறாத இயல்பினர் இருமின்!

தாய்நாட்டன்புறு தனையர்இங்கு இருமின்!
95
ADVERTISEMENTS
மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்!

புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்!
கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்!

ஊரவர் துயரில் நெஞ் சுருகுவீர் இருமின்!
சோரநெஞ் சில்லாத் தூயவர் இருமின்!
100