தேசீய கீதங்கள்

4.தேசிய இயக்கப் பாடல்கள்

32. சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது
செற்றிடும் திறனுடைத் தீரரத் தினங்காள்!

யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய!
தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக!

மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா
ஆற்றலகொண் டிருந்நததிவ் வரும்புகழ் நாடு!
15
ADVERTISEMENTS

வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?

வீரரும் அவரிசை விரித்திடு புலவரும்
பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு!

தர்மமே உருவமாத் தழைத்தபே ரரசரும்
20
நிர்மல முனிவரும் நிறைந்தநன் னாடு!

வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை
ஊரவர் மலடி யென் றுரைத்திடு நாடு!

பாரத பூமி பழம்பெரும் பூமி;
நீரதன் புதல்வர்; இந் நினைவகற் றாதீர்!
25
ADVERTISEMENTS

பாரத நாடு பார்க்கெலாம் திலகம்
நீரதன் புதல்வர்;இந் நினைவகற் றாதீர்!

வானக முட்டும் இமயமால் வரையும்
ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்

காத்திடும் நாடு! கங்கையும் சிந்துவும்
30
தூத்திரை யமுயையும் சுனைகளும் புனல்களும்

இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும்
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!

மைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க
பைந்நிற முகில்கள் வழங்குபொன் னாடு!
35
ADVERTISEMENTS

தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர்
ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு!

ஊனமொன் றறியா ஞானமெய்ப் பூமி
வானவர் விழையும் மாட்சியர் தேயம்!

பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ?
40