தேசீய கீதங்கள்

4.தேசிய இயக்கப் பாடல்கள்

32. சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது
நீரதன் புதல்வர்;இந் நினைவகற் றாதீர்!

தாய்த் திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்,
பேய்த்தகை கொண்டோர்,பெருமையும் வண்மையும்,

ஞானமும் அறியா நவைபுரி பகைவர்,
வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல்
45
ADVERTISEMENTS
இந்நாள் படைகொணர்ந்து இன்னல்செய் கின்றார்!

ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்

மாதர்கற் பழித்தலும் மறையவர் வேள்விக்கு
ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்!
50
சாத்திரக் தொகுதியைத் தாழ்த்துவைக் கின்றார்
கோத்திர மங்கையர் குலங்கெடுக் கின்றார்!

எண்ணில துணைவர்காள்!எமக்கிவர் செயுந்துயர்;
கண்ணியம் மறுத்தனர்;ஆண்மையுங் கடிந்தனர்;

பொருளினைச் சிதைத்தனர்;மருளினை விதைத்தனர்;
55
ADVERTISEMENTS
திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்;

பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்;
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்;

வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்துநம்
ஆரியம் புலையருக் கடிமைக ளாயினர்
60

மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை?
வெற்றிகொள் புலையர்தாள் வீழ்நதுகொல் வாழ்வீர்?

மொக்குள்தான் தோன்றி முடிவது போல
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்!

தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை
65
ADVERTISEMENTS
மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்?

மானமொன் றிலாது மாற்றலர் தொழும்பராய்
ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்?

தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி
நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ?
70