தேசீய கீதங்கள்

4.தேசிய இயக்கப் பாடல்கள்

32. சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது

ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி
வீட்டினைப் பெறுவான் விரும்புவார் சிலரே;

நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து
வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம்.

வேள்வியில் இதுபோல் வேள்வியொன் றில்லை;
135
ADVERTISEMENTS
தவத்தினில் இதுபேவால் தவம்பிறி தில்லை

முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட

மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று
140

இன்னவர் இருத்தல்கண்டுஇதயம்நொந் தோனாய்த்
தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்

"ஐயனே!" இவர்மீ தம்பையோ தொடுப்பேன்!
வையகத் தரசும் வானக ஆட்சியும்

போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன்
145
ADVERTISEMENTS
மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால்;
கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது;

வாயுலர் கின்றது;மனம் பதைக் கின்றது;
ஓய்வுறுங் கால்கள்;உலைந்தது சிரமும்;

வெற்றியை விரும்பேன்;மேன்மையை விரும்பேன்;
150
சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன்;

எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்;
சினையுறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி?"

எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன்
னப்படை வில்லைக் களத்தினில் எறிந்து
155
ADVERTISEMENTS

சோர்வொடு வீழ்ந்தனன்; சுருதியின் முடிவாய்த்
தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான்

வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி,
"புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்,

அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச்
160