தேசீய கீதங்கள்

4.தேசிய இயக்கப் பாடல்கள்

32. சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது
செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்.

உண்மையை அறியாய்;உறவையே கருதிப்
பெண்மைகொண் டேதோ திற்றிநிற் கின்றாய்

வஞ்சகர்,தீயர்,மனிதரை வருத்துவோர்,
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்;இன்னோர்
165
ADVERTISEMENTS

தம்மொடு பிறந்த சகோதர ராயினும்,
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்,

ஆரிய நீதிநீ அறிந்திலை போலும்!
பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை

அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைக்தும்
170
பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை?

பேடிமை யகற்று!நின் பெருமையை மறந்திடேல்!
ஈடிலாப் புகழினாய்!எழுகவோ எழுக!

என்றுமெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக்
குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன்
175
ADVERTISEMENTS

அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய்
மறமே உருவுடை மாற்றலர் தம்மைச்

சுற்றமும் நோக்கான் தோழமை மதியான்
பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன்,

விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில்
180
இசையுநற் றவத்தால் இன் றுவாழ்ந் திருக்கும்

ஆரிய வீரர்காள்! அவருடை மாற்றலர்,
தேரில்,இந் நாட்டினர்,செறிவுடை உறவினர்;

நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர்
செம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம்
185
ADVERTISEMENTS

பிறப்பினில் அன்னியர்,பேச்சினில் அன்னியர்
சிறப்புடை யாரியச் சீர்மையை அறியார்.