தேசீய கீதங்கள்

4.தேசிய இயக்கப் பாடல்கள்

32. சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது

தேவிதாள் பணியுந் தீரர்இங்கு இருமின்!
பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!

உடலினைப் போற்றா உத்தமர் இருமின்!
கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்!

வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்!
105
ADVERTISEMENTS
நம்மனோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்

புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்?
மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின்

இன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும்.
பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும்
110

வீமனும் துரோணனும் வீட்டுமன் தானும்
இராமனும் வேறுள இருந்திறல் வீரரும்

நற்றுணை புரிவர்;வானக நாடுறும்;
வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்.

பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர்
115
ADVERTISEMENTS
செற்றினி மிலேச்சரைக் தீர்த்திட வம்மின்!

ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்!
நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!

வாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும்,
ஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின்
120

உருளையி னிடையினும், மாற்றலர் தலைகள்
உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்!

நம் இதம்;பெருவளம் நலிந்திட விரும்பும்
(வன்மியை)வேரறத் தொலைத்தபின் னன்றோ

ஆணெனப் பெறுவோம்;அன்றிநாம் இறப்பினும்
125
ADVERTISEMENTS
வானுறு தேவர் மணியுல கடைவோம்!

வாழ்வமேற் பாரத வான்புகழ் தேவியைத்
தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்!

போரெனில் இதுபோர்!புண்ணியத் திருப்போர்!
பாரினில் இதுபோற் பார்த்திடற்கெளிதோ?
130