தேசீய கீதங்கள்

3.சுதந்திரம்

31. சுதந்திரப் பள்ளு பள்ளர் களியாட்டம்

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே-பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே-இனி
நல்லோர் பெரிய ரென் னும் காலம் வந்ததே-கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே
(ஆடுவோமே)
ADVERTISEMENTS

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்-வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்
(ஆடுவோமே)

நாமிருக்கும் நாடுநமது என்ப தறிந்தோம்-இது
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்-இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்-பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.
(ஆடுவோமே)
ADVERTISEMENTS
ஜயஜய பவானி!ஜயஜய பாரதம்!
ஜயஜய மாதா!ஜயஜய துர்க்கா!
வந்தே மாதரம்!வந்தே மாதரம்!

சேனைத் தலைவர்காள்! சிறந்தமந் திரிகாள்!
யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்!
5
ADVERTISEMENTS

அதிரத மன்னர்காள்! துரகத் ததிபர்காள்!
எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்!

வேலெறி படைகாள்!சூலெறி மறவர்காள்!
கால னுருக்கொளும் கணைதுரந் திடுவீர்,

மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச்
10