தேசீய கீதங்கள்

3.சுதந்திரம்

26.சுதந்திரப் பெருமை "தில்லை எவளியிலே கலந்துவிட் டாலவர் திரும்பியும் வருவாரோ?"என்னும் வர்ணமெட்டு

மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும்
வாய்மையை உயர்ந்தா ரேல்-அவர்
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற
உடன்படு மாறுள தோ?
(வீர)
ADVERTISEMENTS

விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்
மின்மினி கொள்வா ரோ?
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பா ரோ?
(வீர)

மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ!
(வீர)
ADVERTISEMENTS

வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்குவ ரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ?
(வீர)
தண்ணீர்விட் டோவளர்த்தோம்? சர்வேசா!இப்யிரைக்
கண்ணீராற் காத்தோம்;கருகத் திருவுளமோ?
1
ADVERTISEMENTS

எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?
2