தேசீய கீதங்கள்

2.தமிழ் நாடு

24. தமிழச் சாதி
முழுதுமே தழுவி மூழ்கிடி னல்லால்,
தமிழச் சாதி தரணிமீ திராது,
பொய்ததழி வெய்தல் முடி பெனப் புகலும்.
நன்றடா!நன்று!நாமினி மேற்றிசை
வழியெலாந் தழுவி வாழ்குவம் எனிலோ.
85
ADVERTISEMENTS
‘ஏ எ!அஃதுமக் கிசையா’ தென்பர்;
‘உயிர்தரு மேற்றிசை நெறிகளை உவந்துநீர்
தழுவிடா வண்ணந் தடுத்திடும் பெருந்தடை
பல, அனைவ நீங்கும் பான்மைய வல்ல’
என்றருள் புரிவர். இதன்பொருள்’சீமை
90
மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச்
சாதியின் நோய்க்குத் தலையசைத் தேகினர்
என்பதே யாகும்;இஃதொரு சார்பாம்
பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரொடு
நமதுமூ தாதையர்(நாற்பதிற் றாண்டின்
95
ADVERTISEMENTS
முன்னிருந் தவரோ முந்நூற்றாண்டிற்கு
அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ? ஆயிரம்
ஆண்டின் முன்னவரோ, ஐயா யிரமோ?
பவுத்தரேநாடெலாம் பல்கிய காலத்
தவரோ? புராண மாக்கிய காலமோ?
100
சைவரோ? வைணவ சமயத் தாரோ?
இந்திரன் தானே தனிமுதல்கடவுள்
என்றுநம் முன்னோர் ஏத்திய வைதிகக்
காலத் தவரோ? கருத்திலா தவர்தாம்
எமதும தாதைய தென்பதிங் கெவர்கொல்?)
105
ADVERTISEMENTS
நமதுமூ தாதையர் நயமறக் காட்டிய
ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும்
ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே
தழுடின் வாழ்னவ தமிழர்க் குண்டு;
எனில், அது தழுவல் இயன்றிடா வண்ணம்
110