தெய்வப் பாடல்கள்

42. சாகா வரம்

பல்லவிசாகாவர மருள்வாய், ராமா!
சதுர்மறை நாதா!-சரோஜ பாதா!சரணங்கள்ஆகாசந் தீகால் நீர்மண்
அத்தனை தமும் ஒத்து நிறைந்தாய்
ஏகாமிர்த மாகிய நித்ள்
இணைசர ணென்றால் இதுமுடி யாதா? (சாகா)வாகார்தோள் வீரா, தீரா,
மன்மத ரூபா, வானவர் பூபா,
பாகார்மொழி சீதையுன் மென்தோள்
பழகிய மார்பா! பதமலர் சார்பா! (சாகா)

நித்யா,நிர்மலா,ராமா
நிஷ்க ளங்கா, சர்வா தாரா,
சத்யா, சநாதநா,ராமா,
சரணம்,சரணம்,சரண முதாரா! (சாகா)

ADVERTISEMENTS
கண்ணி ரண்டும் இமையாமல் செந்நிறத்து
மெல்லிதழ்ப்பூங் கமலத் தெய்வப்
பெண்ணிரண்டு விழிகளைஹயம் நோக்கிடுவாய்
கோவிந்தா! பேணி னோர்க்கு
நண்ணிரண்டு பொற்பாத மளித்தருள்வாய்
சராசரத்து நாதா! நாளும்
எண்ணிரண்டு கோடியினும் மிப்பலவாம்
வீண்கவலை எளிய னேற்கே.

எளியனேன் யானெனலை எப்போது
போக்டுவாய்,இறைவ னே!இவ்
வளியிலே பறவையிலே மரத்தினிலே
முகிலினிலே வரம்பில் வான
செளியிலே கடலிடையே மண்ணகத்தே
வீதியிலே வீட்டி லெல்லாம்
களியிலே, கோவிந்தா!நினைக்கண்டு
நின்னொடுநான் கலப்ப தென்றோ?

என்கண்ணை மறதுனிரு கண்களையே
என்னகத்தில் இசைத்துக்கொண்டு
நின்கண்ணாற் புவியெல்லாம் நீயெனவே
நான்கண்டு நிறைவு கொண்டு
எவனகண்மை மறதியுடன் சோம்பர்முதற்
பாவமெலாம் மடிந்து,நெஞ்சிற்
புன்கண்போய் வாழ்ந்திடவே, கோவிந்தா!
என்க்கமுதம் புகட்டு வாயே.

வேத வானில் விளங்கி"அறஞ்செய்மின்,
சாதல் நேரினுஞ் சத்தியம் பூணுமின்,
தீத கற்றுமின்"என்று திசையெல்லாம்
மோத நித்தம் இடித்து முழுங்கியே.

உண்ணுஞ் சாதிக் குறக்கமும் சாவுமே
நண்ணு றாவணம் நன்கு புரந்திடும்
எண்ண ரும்புகழ்க் கீதையெனச் சொலும்
பண்ண மிழ்தத் தருள்மழை பாலித்தே,

எங்க ளாரிய பூமி யெனும்பயிர்
மக்க ளம்பெற நித்தலும் வாழ்விக்கும்
துங்க முற்ற துணைமுகி லே! மலர்ச்
செங்க ணாய்நின் பதமலர் சிந்திப்பாம்

வீரர் தெவ்தம் கர்ம விளக்குநற்
பார தர்செய் தவத்தின் பயனெ னும்
தார விர்ந்த தடம்புயக் பாத்தனோர்
கார ணம்மெனக் கொண்டு கடவுள்நீ.

நின்னை நம்பி நிலத்திடை யென்றுமே
மன்னு பாரத மாண்குலம் யாவிற்கும்
உன்னுங் காலை உயர்துணை யாகவே
சொன்ன சொல்லை யுயிரிடைச் சூடுவோம்.

ஐய கேளினி யோர்சொல் அடியர்யாம்
உய்ய நின்மொழி பற்றி யோழுகிய
மைய றும்புகழ் வாழ்க்கை பெறற்கெனச்
செய்யும் செய்கையி னின்னருள் சேர்பையால்.

ஒப்பி லாத உயர்வொடு கல்வியும்
எய்ப்பில் வீரமும் இப்புவி யாட்சியும்
தப்பி லாத தருமமுங் கொண்டுயாம்
அப்ப னேநின் னடிபணிந் துய்வமால்.

மற்று நீயிந்த வாழ்பு மறுப்பையேல்
சற்று நேரத்துள் எம்முயிர் சாய்த்தருள்
கொற்ற வா!நின் குவலய மீதினில்
வெற்று வாழ்க்கை விரும்பி யழிகிலேம்.

நின்தன் மாமர பில்வந்து நீசராய்ப்
பொன்றல் வேண்டிலம் பொற்கழ லாணைகாண்
இன்றிங் கெம்மை யதம்புரி, இல்லையேல்
வென்றி யும்புக ழுந்தரல் வேண்டுமே.

ADVERTISEMENTS
பல்லவிவருவாய் வருவாய் வருவாய்-கண்ணா!
வருவாய் வருவாய் வருவாய்!சரணங்கள்உருவாய் அறிவில் ஒளிர்வாய்-கண்ணா!
உயிரின் னமுதாய்ப் பொழிவாய்-கண்ணா!
கருவாய் என்னுள் வளர்வாய்-கண்ணா!
கமலத் திருவோ டிணைவாய்-கண்ணா! (வருவாய்)

இணைவாய் எனதா வியிலே-கண்ணா!
இதயத் ரிதனிலே யமர்வாய்-கண்ணா!
கணைவா யசரர் தலைகள்-சிதறக்
கடையூ ரியிலே படையோ டெழுவாய்! (வருவாய்)

எழுவாய் கடல்மீ தினிலே-எழுமோர்
இரவிக் கணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே-கண்ணா!
துணையே அமரர் தொழும் வானவனே! (வருவாய்)

காயிலே புளிப்பதென்னே கண்ண பெருமானே!-நீ
கனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே!
நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே!-நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே?கண்ண பெருமானே!

காற்றிலே குளிர்ந்ததென்னே?கண்ண பெருமானே!-நீ
கனலிலே சுடுவதென்னே? கண்ண பெருமானே!
சேற்றிலே குழம்பலென்னே? கண்ண பெருமானே!
திக்கிலே தெளிந்ததென்னே? கண்ண பெருமானே!

ஏறிறிநின்னைத் தொழுவதென்னே? கண்ண பெருமானே!நீ
எளியர்தம்மைக் காப்பதென்னே? கண்ண பெருமானே!
போற்றினோரைக் காப்பதென்னே!கண்ண பெருமானே!நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே?கண்ண பெருமானே!

வேறு

போற்றி!போற்றி!போற்றி!போற்றி!
கண்ண பெருமானே!-நீ
பொன்னடி போற்றி நின்றேன்
கண்ண பெருமானே!

ADVERTISEMENTS
ராகம்-யதுகுல காம்போதி தாளம்-ஆதி

காக்கைச் சிறகினிலே நந்த லாலா!-நின்தன்
கரியநிறந் தோன்று தையே நந்த லாலா!
பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா!-நின்தன்
பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா!
கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன்
கீத மிசக்குதடா நந்த லாலா!
தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத்
தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா!