தேசீய கீதங்கள்

1. பாரத நாடு

8. பாரத மாதா

சித்த மயமிவ் வுலகம் உறுதிநம்
சித்தத்தில் ஓங்கிவிட் டால்-துன்பம்
அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல்
4
ADVERTISEMENTS

சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத்
தட்டி விளை யாடி-நன்று
உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி
ஒளியுறப் பெற்ற பிள்ளை.
5

காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
கல்லொத்த தோள்எவர் தோள்?-எம்மை
ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்
ஆரிய தேவியின் தோள்.
6
ADVERTISEMENTS

சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்
தந்த தெவர்கொடைக் கை?-சுவைப்
பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்
பாரத ராணியின் கை.
7

போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை
புகன்ற தெவருடை வாய்?-பகை
தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத
தேவி மலர்த்திரு வாய்.
8
ADVERTISEMENTS

தந்தை இனிதுறத் தான்அர சாட்சியும்
தையலர் தம் முறவும்-இனி
இந்த உலகில் விரும்புகி லேன் என்றது
எம்அனை செய்த உள்ளம்.
9