தேசீய கீதங்கள்

1. பாரத நாடு

9. எங்கள் தாய்

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரி வாள்எங்கள் தாய்-அவர்
அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்திடு வாள்.
9
ADVERTISEMENTS

வெண்மை வளரிம யாசலன் தந்த
விறன்மக ளாம்எங்கள் தாய்-அவள்
திண்மை மறையினும் தான்மறை யாள்நித்தஞ்
சீருறு வாள் எங்கள் தாய்.
10
ராகம்-ஆபோகி
தாளம்-ரூபகம்
ADVERTISEMENTS

பேயவள் காண்எங்கள் அன்னை-பெரும்
பித்துடை யாள்எங்கள் அன்னை
காயழல் ஏந்திய பித்தன்-தனைக்
காதலிப் பாள்எங்கள் அன்னை.
(பேயவள்)

இன்னிசை யாம்இன்பக் கடலில்-எழுந்து
எற்றும் அலைத்திரள் வெள்ளம்
தன்னிடம் மூழ்கித் திளைப்பாள்-அங்குத்
தாவிக் குதிப்பாள்எம் அன்னை.
(பேயவள்)
ADVERTISEMENTS

தீஞ்சொற் கவிதையஞ் சோலை-தனில்
தெய்விக நன்மணம் வீசும்
தேஞ்சொரி மாமலர் சூடி-மதுத்
தேக்கி நடிப்பாள்எம் அன்னை.
(பேயவள்)