முப்பெரும் பாடல்கள்

3. குயில் பாட்டு

உயிர் பெற்ற தமிழர் பாட்டு
பல்லவி

இனிஒரு தொல்லையும் இல்லை-பிரி
வில்லை,குறையும் கவலையும் இல்லை (இனி)

ஜாதி

மனிதரில் ஆயிரம் ஜாதி-என்ற
வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை;
கனிதரும் மாமரம் ஒன்று-அதில்
காய்களும் பிஞ்சுக் கனிகளும் உண்டு.

பூவில் உதிர்வதும் உண்டு-பிஞ்சைப்
பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு
நாவிற் கினியதைத் தின்பார்-அதில்
நாற்பதி னாயிரம் சாதிகள் சொல்வார்.

ஒன்றுண்டு மானிட சாதி-பயின்று
உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்;
இன்று படுத்தது நாளை-உயர்ந்
தேற்றம் அடையும் உயர்ந்த திழியும்.

நந்தனைப் போல்ஒரு பார்ப்பான்-இந்த
நாட்டினில் இல்லை;குணம் நல்லதாயின்,
எந்தக் குலத்தின ரேனும்-உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.

இன்பத்திற்கு வழி

ஐந்து புலனை அடக்கி-அரசு
ஆண்டு மதியைப் பழகித் தெளிந்து,
நொந்து சலிக்கும் மனதை-மதி
நோக்கத்திற் செல்ல விடும்பகை கண்டோம்.

புராணங்கள்

உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.

கடலினைத் தாவும் குரவும்-வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்,

நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த-திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்-ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார்-அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்.

கவிதை மிகநல்ல தேனும்-அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி-நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.

ஸ்மிருதிகள்

பின்னும்(ஸ்)மிருதிகள் செய்தார்-அவை
பேணும் மனிதர் உலகினில் இல்லை;
மன்னும் இயல்பின வல்ல-இவை
மாறிப் பயிலும் இயல்பின ஆகும்.

காலத்திற் கேற்ற வகைகள்-அவ்வக்
காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்றாய்.எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை

சூத்திர னுக்கொரு நீதி-தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடு மாயின்-அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.

மேற்குலத்தார் எவர்?
வையகம் காப்பவ ரேனும்-சிறு
வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்,
பொய்யக லத்தொழில் செய்தே-பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.

தவமும் யோகமும்

உற்றவர் நாட்டவர் ஊரார் -இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம்-இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை.
பக்கத் திருப்பவர் துன்பம்-தன்னைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி;
ஒக்கத் திருந்தி உலகோர்-நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி.

யோகம்,யாகம்,ஞானம்

ஊருக் குழைத்திடல் யோகம்;-நலம்
ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும்-உளம்
பொங்கல் இல்லாத அமைதிமெய்ஞ் ஞானம்.

பரம்பொருள்

எல்லையில் லாத உலகில்-இருந்
தெல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம்
எல்லையில் லாதன வாகும்-இவை
யாவையு மாயிவற் றுள்ளுயி ராகி,

எல்லையில் லாப்பொருள் ஒன்று-தான்
இயல்பறி வாகி இருப்பதுண் டென்றே,
சொல்லுவர் உண்மை தெளிந்தார்-இதைத்
தூவெளி யென்று தொழுவர் பெரியோர்.

நீயும் அதனுடைத் தோற்றம்-இந்த
நீல நிறங்கொண்ட வானமும் ஆங்கே,
ஓயுதல் இன்றிச் சுழலும்-ஒளி
ஓங்குபல் கோடிக் கதிர்களும் அஃதே,

சக்திகள் யாவும் அதுவே-பல்
சலனம் இறத்தல் பிறத்தலும் அஃதே
நித்திய மாமிவ் வுலகில்-கடல்
நீரில் சிறுதுளி போலும்இப் பூமி,

இன்பமும் ஓர்கணத் தோற்றம்-இங்கு
இளமையும் செல்வமும் ஓர்கணத் தோற்றம்;
துன்பமும் ஓர்கணத் தோற்றம்-இங்கு
தோல்வி முதுமை ஒருகணத் தோற்றம்.

முக்தி

தோற்றி அழிவது வாழ்க்கை-இதில்
துன்பத்தோ டின்பம் வெறுமையென் றோதும்
மூன்றில் எதுவரு மேனும்-களி
மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி. (இனி)


*இளசை ஒருபா ஒரபஃது

காப்பு

நித்தரெனும் தென்னிளசை நின்மலனார் தாம்பயந்த
அத்திமுகத் தெங்கோ னடியிணையே-சித்திதரும்
என்தமிழி லேது மிழுக்கிலா மேயஃது

நன்றாகு வென்றருளும் நன்கு.

நூல்

தேனிருந்த சோலைசூழ் தென்னிளசை நன்னகரின்
மானிருந்த கையன் மலரடியே-வானிற்
சுரர்தம னியன்மால் தொழுங்காற் கிரீடத்
தரதனங்கள் சிந்து மகம்.

அகவிடத்திற் கோர்திலக மாமென் னிளசைப்
பகவனென் னெட்டீசன் பதமே-திகிரி
பொருந்துகரத் தானன்றோர் போத்திரியாய்த் தேடி
வருந்தியுமே காணாச்செல் வம்.

செல்வ மிரண்டுஞ் செழித்தோங்குந் தென்னிளசை
யில்வளரும் ஈசன் எழிற்பதமே-வெல்வயிரம்
ஏந்துகரத் தான்கரியன் எண்கணன்தம் உள்ளத்துப்
போந்துவளர் கின்ற பொருள்.

பொருளாள ரீய வேற்போ ரிளசை
மருளாள ரீச ரடியே-தெருள்சேர்
தமனா மறையவன்மேற் றன்பாச மிட்ட
சமனாவி வாங்கும்பா சம்

சங்கந் தவழ்கழனி தண்இளசை நன்னகரில்
எங்கள் சிவனார் எழிற்பதமே-துங்கமிகும்
வேத முடியின் மிசையே விளங்குறுநற்
சோதியென நெஞ்சே துணி

துணிநிலவார் செஞ்சடையன் தோள்இளசை ஊரன்
மணிகண்டன் பாத மலரே-பிணிநரகில்
வீழச்செய் யாது விரும்பியஈந் தேஅடியர்
வாழச்செய் கின்ற மருந்து.

மருளறக் கற்றோர்கண் மருவிளசை ஊரில்
வருமிறைவன் பாத மலரே-திருவன்
விரைமலரா விட்ட விழியாம் வியன்றா
மரைபூத்த செந்தா மரை.

தாமரையின் முத்தெங்குந் தான்சிதறுந் தென்னிளசைக்
கோமானெட் டீசன்மலர் கொள்பதமே-நாமவேல்
வல்லரக்கன் கைலை வரையெடுத்த காலவனை
அல்லற் படவடர்த்த தால்

ஆல விழியா ரவர்முலைநேர் தண்வரைசூழ்
கோல மணிஇளசைக் கோன்பதமே-சீல
முனிவர் விடுத்த முயலகன் மீதேறித்
தனிநடனஞ் செய்ததுவே தான்

தானே பரம்பொரளாந் தண்ணிளசை யெட்டீசன்
தேனேய் கமலமலர்ச் சீரடியே-யானேமுன்
செய்தவினை தீர்த்துச் சிவாநந்தம் பொங்கியருள்
எய்திடவுஞ் செய்யும் எனை.

தனி

கன்னனெனும் எங்கள் கருணைவெங்க டேசுரெட்ட
மன்னவன் போற்றுசிவ மாணடியே-அன்னவனும்
இந்நூலுந் தென்னா ரிளசையெனும் நன்னகரும்
எந்நாளும் வாழவைக்கு மே.
ADVERTISEMENTS
*ஜாதீய கீதம்

பங்கிம் சந்திர சட்டோபாத்யாயர் வங்காளியில் இயற்றிய
“வந்தே மாதரம்”கீதம்.*

ஸுஜலாம்,ஸுபலாம் மலயஜ சீதலாம்
ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம். -வந்தே மாதரம்

ஸுப்ர ஜ்யோத்ஸ்நா புளகித யாமிநீம்
புல்ல குஸுமித த்ருமதள ஸோபிநும்
ஸுஹாஸிநீம்,ஸுமதுர பாஷிணீம்
ஸுகதாம்,வரதாம்,மாதரம். -வந்தே மாதரம்

ஸப்த கோடி கண்ட கலகல நிநாத கராலே
த்விஸப்த கோடி புஜைர் த்ருதகர கரவாலே
கே போலே,மா துமி அபலே
பஹுபல தாரிணீம்,நமாமி தாரிணீம் -வந்தே மாதரம்

துமி வித்யா,துமி தர்ம,
துமி ஹ்ருதி,துமி மர்ம,
த்வம்ஹி ப்ராணா:சரீரே
பாஹுதே துமி மா சக்தி
தொமா ரேயி ப்ரதிமா கடிமந்திரே மந்திரே. -வந்தே மாதரம்

த்வம்ஹி துர்கா தசப்ரஹரண தாரிணீ
கமலா கமலதள விஹாரிணீ
வாணீ வித்யா தாயிநீ,நமாமித்வாம். -வந்தே மாதரம்

நமாமி,கமலாம்,அமலாம்,அதுலாம்,
ஸுஜலாம்,ஸுபலாம் மாதரம்
ஸ்யாமளாம்,ஸரளாம்,ஸுஸ்மிதாம்,பூஷிதாம், -வந்தே மாதரம்
செஞ்சுருட்டி-திஸ்ர ஏக தாளம் சிருங்கார ரசம் தூண்டிற் புழுவினைப்போல்-வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக -எனது
நெஞ்சத் துடித்த தடீ!

கூண்டுக் கிளியினைப் போல்-தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம்-மனது
வெறுத்து விட்ட தடீ!

பாயின் மிசை நானும்-தனியே
படுத் திருக்கையி லே,
வாயினில் வந்ததெல்லாம்-சகியே!
தாயினைக் கண்டாலும்-சகியே!
சலிப்பு வந்த தடீ!

வளர்த்துப் பேசிடு வீர்;
நோயினைப் போலஞ்சி னேன்;-சகியே!
நுங்க ளுறவையெல் லாம்.

உணவு செல்லவில்லை;-சகியே!
உறக்கங் கொள்ளவில்லை;
மணம் விரும்பவில்லை;-சகியே!
மலர் பிடிக்கவில்லை;

குண முறுதி யில்லை;-எதிலும்
குழப்பம் வந்த தடீ!
கணமும் உள்ளத்திலே-சுகமே
காணக் கிடைத்த தில்லை.

பாலுங் கசந்ததடீ!-சகியே!
படுக்கை நொந்த தடீ!
நாலு வயித்தியரும்-இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்;
பாலந்துச் சோசியனும்-கிரகம்
படுத்து மென்று விட்டான்.

கனவு கண்டதிலே-ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றா மல்,
இனம் விளங்க வில்லை-எவனோ
என்னகந் தொட்டு விட்டான்,
வினவக் கண் விழித்தேன்;-சகியே!
மேனி மறைந்து விட்டான்;
மனதில மட்டிலுமே -புதிதோர்
மகிழ்ச்சி கண்ட தடீ!

உச்சி குளிர்ந்ததடீ;-சகியே!
உடம்பு நேராச்சு
மச்சிலும் வீடுமெல்லாம்-முன்னைப்போல்
மனத்துக் கொத்த தடீ!
இச்சை பிறந்ததடீ-எதிலும்
இன்பம் விளைந்த தடீ;
அச்ச மொழிந்த தடீ;-சகியே!
அழகு வந்த தடீ!

எண்ணும் பொழுதி லெல்லாம்-அவன்கை
இட்ட விடத்தினி லே
தண்ணென் றிருந்ததடீ!-புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்;-அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் -அங்ஙனே
கண்ணின் முன் நின்ற தடீ!

ADVERTISEMENTS
உறக்கமும் விழிப்பும். நாத நாமக்கிரியை-ஆதி தாளம் ரசங்கள் :பீபத்ஸம்.சிருங்காரம் நேரம் மிகுந்ததின்னும் நித்திரையின்றி-உங்கள்
நினைப்புத் தெரியவில்லை,கூத்தடிக்கிறீர்;
சோரன் உறங்கிவிழும் நள்ளி ரவிலே-என்ன
தூளி படுகுதடி,இவ்விடத்திலே?
ஊரை யெழுப்பிவிட நிச்சயங் கொண்டீர்-அன்னை
ஒருத்தியுண் டென்பதையும் மறந்து விட்டீர்;
சாரம் மிகுந்ததென்று வார்த்தை சொல்கிறீர்,-மிகச்
சலிப்புக் தருகுதடி சகிப் பெண்களே!

நானும் பலதினங்கள் பொறுத்திருந்தேன்,-இது
நாளுக்கு நாளதிக மாகிவிட் டதே;
கூன னொருவன் வந்ததிந் நாணி பின்னலைக்
கொண்டை மலர்சிதற நின்றிழுத்ததும்,
ஆனைமதம் பிடித்திவ் வஞ்சி யம்மையின்
அருகினி லோடஇவள் மூர்ச்சை யுற்றதும்
பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால்
பாங்கி யுரோகிணிக்கு நோவு கண்டதும்.

பத்தினி யாளையொரு பண்ணை வெளியில்
பத்துச் சிறுவர் வந்து முத்தமிட்டதும்,
நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்த
நாற்ப தரசர் தம்மை வாக்களித்ததும்
கொத்துக் கனல்விழியக் கோவினிப் பெண்ணைக்
கொங்கத்து மூளிகண்டு கொக்கரித்ததும்,
வித்தைப் பெயருடைய வீணியவளும்
மேற்குத்திசை மொழிகள் கற்று வந்ததும்.

எத்தனை பொய்களடி!என்ன கதைகள்!
என்னை உறக்கமின்றி இன்னல் செய்கிறீர்;
சத்தமிடுங் குழல்கள் வீணைக ளெல்லாம்
தாளங்க ளோடுகட்டி மூடிவைத் தங்கே;
மெத்த வெளிச்சமின்றி ஒற்றை விளக்கை
மேற்குச் சுவரருகில் வைத்ததன் பின்னர்
நித்திரை கொள்ளஎனைத் தனியில் விட்டே
நீங்களெல் லோருமுங்கள் வீடு செல்லுவீர்.

பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்

கண்கள் உறங்கவொரு காரண முண்டோ,
கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே?
பெண்களெல் லோருமவர் வீடு சென்றிட்டார்;
பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்.
வெண்கல வாணிகரின் வீதி முனையில்
வேலிப் புறத்திலெனைக் காணடி யென்றான்;
கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ,
கண்ணனைக் கையிரண்டுங் கட்ட லின்றியே?

காட்டிலே தேடுதல் ஹிந்துஸ்தானி தோடி-ஆதி தாளம் ரசங்கள்-பயாநகம்,அற்புதம் திக்குத் தெரியாத காட்டில்-உனைத்
தேடித் தேடி இளைத்தேனே. மிக்க நலமுடைய மரங்கள்,-பல
விந்தைச் சுவையுடைய கனிகள்,-எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள்,-அங்கு
பாடி நகர்ந்து வரு நதிகள்,-ஒரு (திக்குத்)

நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள்,-எங்கும்
நீளக் கிடக்குமலைக் கடல்கள்,-மதி
வஞ்சித் திடுமகழிச் சுனைகள்,-முட்கள்
மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள்,-ஒரு (திக்குத்)

ஆசை பெறவிழிக்கும் மான்கள்-உள்ளம்
அஞ்சக் குரல் பழகும்,புலிகள்,-நல்ல
நேசக் கவிதைசொல்லும் பறவை,-அங்கு
நீண்டே படுத்திருக்கும் பாம்பு,-ஒரு (திக்குத்)

தன்னிச்சை கொண்டலையும் சிங்கம்-அதன்
சத்தத் தினிற்கலங்கும் யானை-அதன்
முன்னின் றோடுமிள மான்கள்-இவை
முட்டா தயல்பதுங்குந் தவளை-ஒரு (திக்குத்)

கால்கை சோர்ந்துவிழ லானேன்-இரு
கண்ணும் துயில்படர லானேன்-ஒரு
வேல்கைக் கொண்டுகொலை வேடன்-உள்ளம்
வெட்கங் கொண்டொழிய விழித்தான்-ஒரு (திக்குத்)

‘பெண்ணே உனதழகைக் கண்டு -மனம்
பித்தங் கொள்ளு’ தென்று நகைத்தான்-”அடி
கண்ணே,எனதிருகண் மணியே-உனைக்
கட்டித் தழுவமனங் கொண்டேன். (திக்குத்)

சோர்ந்தே படுத்திருக்க லாமோ?-நல்ல
துண்டக் கறிசமைத்துத் தின்போம்-சுவை
தேர்ந்தே கனிகள்கொண்டு வருவேன்-நல்ல
தேங்கள் ளுண்டினிது களிப்போம்.” (திக்குத்)

என்றே கொடியவிழி வேடன்-உயிர்
இற்றுப் போகவிழித் துரைத்தான்-தனி
நின்றே இருகரமுங் குவித்து-அந்த
நீசன் முன்னர்இவை சொல்வேன்; (திக்குத்)

அண்ணா உனதடியில் வீழ்வேன்-எனை
அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா-பிறன்
கண்ணாலஞ் செய்துவிட்ட பெண்ணை-உன்தன்
கண்ணாற் பார்த்திடவுந் தகுமோ?”

“ஏடீ,சாத்திரங்கள் வேண்டேன்-நின
தின்பம் வேண்டுமடி,கனியே!-நின்தன்
மோடி கிறுக்குதடி தலையை,-நல்ல
மொந்தைப் பழையகள்ளைப் போல”

காதா லிந்தவுரை கேட்டேன்-‘அட
கண்ணா’வென் றலறி வீழ்ந்தேன்-மிகப்
போதாக வில்லையிதற் குள்ளே-என்தன்
போதந் தெளியநினைக் கண்டேன்.

கண்ணா!வேடனெங்கு போனான்?-உனைக்
கண்டே யலறிவிழுந் தானோ?-மணி
வண்ணா! என தபயக் குரலில்-எனை
வாழ்விக்க வந்த அருள் வாழி!

ADVERTISEMENTS
பாங்கியைத் தூது விடுத்தல்தங்கப் பாட்டு மெட்டுரசங்கள்: சிரங்காரம்,ரௌத்ரம் கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் (அடி தங்கமே தங்கம்) கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம்-பின்னர்
ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம்.

கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம்-நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்;
அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம்-என்னும்
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம்

சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே-எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம்;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான்?-அவை
யாவும் தெளிவுபெறக் கேட்டு விடடீ

மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம்-தலை
மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ?
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே-கிழப்
பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம்.

ஆற்றங் கரையதனில் முன்ன மொருநாள்-எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்
தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே
சொல்லி வருவையடி தங்கமே தங்கம்.

சோர மிழைத்திடையர் பெண்களுடனே-அவன்
சூழ்ச்சித் திறமை ப காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ!

பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்-மிகப்
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்;
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதிவந்திட்டான்-அதைப்
பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே

நேர முழுதிலுமப் பாவி தன்னையே-உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால்-பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம்.