1. பாரத நாடு | |
5.பாரத தேசம் | |
ஆயுதம் செய் வோம்நல்ல காகிதம்சேய் வோம்; ஆலைகள்வைப் போம் கல்விச் சாலைகள்வைப் போம்; ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்; உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். | |
(பாரத) | |
ADVERTISEMENTS
| |
குடைகள் செய் வோம்உழு படைகள்செய் வோம், கோணிகள் செய் வோம்இரும் பாணிகள் செய் வோம்; நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்; ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள்செய் வோம். | |
(பாரத) | |
மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்; வானையளப் போம் கடல் மீனையளப் போம்; சந்திரமண் டலத்தியல் கண்டு தெளி வோம்; சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம்கற் போம். | |
(பாரத) | |
ADVERTISEMENTS
| |
காவியம்செய் வோம், நல்ல காடுவளர்ப் போம்; கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்; ஓவியம்செய் வோம் நல்ல ஊசிகள்செய் வோம்; உலகத்தொழிலனைத்து முவந்துசெய் வோம். | |
(பாரத) | |
சாதி இரண்டொழிய வேறில்லை'யென் றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென் போம்; நீதிநெறி யினின்று பிறர்க்குத வும் நேர்மையர் மேலவர்; கீழவர்மற் றோர். | |
(பாரத) | |
ADVERTISEMENTS
| |
ராகம்- பூபாளம் |