முப்பெரும் பாடல்கள்

2. பாஞ்சாலி சபதம்
(இரண்டாம் பாகம்)
அடிமைச் சருக்கம்

51. சகுனி சொல்வது
‘புண்ணிடைக் கோல்கொண்டு குத்துதல்-நின்னைப்
போன் றவர் செய்யத் தகுவதோ?-இரு
கண்ணி லினியவ ராமென்ற-இந்தக்
காளையர் தம்மைஇங் குந்தைதான்-நெஞ்சில்
எண்ணி யிருப்ப தறிகுவாய்;-இவர்
யார்? நின்றன்சோதர ரல்லரோ? களி
நண்ணித் தொடங்கிய சூதன்றோ?-இவர்
நாணுறச் செய்வது நேர்மையோ?

‘இன்னும் பணய்ம்வைத் தாடுவோம்?-வெற்றி
இன்னும் இவர் பெற லாகுங்காண்,
பொன்னுங் குடிகளுந் தேசமும்-பெற்றுப்
பொறபொடு போதற் கிடமுண்டாம்;-ஒளி
மின்னும் அமுதமும் போன்றவள்-இவர்
மேவிடு தேவியை வைத்திட்டால்,-(அவள்)
துன்னும் அதிட்ட முடையவள் இவர்
தோற்ற தனைத்தையும் மீட்டலாம்’

‘என்றந்த மாமன் உரைப்பவே வளர்
இன்பம் மனத்தி லுடையனாய்-மிக
நன்றுநன்‘றென்று சுயோதனன்-சிறு
நாயொன்று தேன்கல சத்தினை -எண்ணித்
துன்று முவகையில் வெற்றுநா-வினைத்
தோய்த்துச் சுவைத்து மகிழ்தல்போல்-அவன்
ஒன்றுரை யாம லிருந்திட்டான்-அழி
வுற்ற துலகத் தறமெலாம்.

ADVERTISEMENTS
பாவியர் சபைதனி லே,-புகழ்ப்
பாஞ்சால நாட்டினர் தவப்பயனை,
ஆவியில் இனியவ ளை,-உயரித்து
அணிசுமந் துலவிடு செய்யமு தை,
ஓவியம் நிகர்த்தவ ளை,-அரு
ளொளியினைக் கற்பனைக் குயிரதனைத்
தேவியை,நிலத்திரு வை-எங்குந்
தேடினுங் கிடைப்பருந் திரவியத் தை,

படிமிசை இசையுற வே-நடை
பயின் றிடுந் தெய்விக மலர்க்கொடி யைக்
கடிகமழ் மின்னுரு வை,-ஒரு
கமனியக் கனவினைக் காதலினை,
வடிவுறு பேரழ கை-இன்ப
வளத்தினைச் சூதினில் பணயம் என்றே
கொடியவர் அவைக்களத் தில்-அறக்
கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான்.

வேறு
வேள்விப் பொருளினை யே-புலை நாயின் முன்
மென்றிட வைப்பவர் போல்,
நீள்விட்டப் பொன் மாளி கை-கட்டிப் பேயினை
நேர்ந்து குடியேற்றல் போல்,
ஆள்விற்றுப் பொன்வாங்கி யே-செய்த பூண யோர்
ஆந்தைக்குப் பூட்டுத்ல் போல்,
கேள்விக் கொருவரில் லை-உயிர்த் தேவியைக்
கீழ்மக்கட் காளாக்கி னான்.

செருப்புக்குத் தோல்வேண்டி யே-இங்குக் கொல்வரோ
செல்வக் குழந்தையி னை?
விருப்புற்ற சூதினுக் கே-ஒத்த பந்தயம்
மெய்த் தவப் பாஞ்சாலியோ?
ஒருப்பட்டுப் போன வுடன் -கெட்ட மாமனும்
உன்னியத் தாயங்கொண் டே
இருப்பகடை போடென்றான்-பொம்மைக் காய்களும்
இருப்பகடை போட்டவே.

திக்குக் குலுங்கிடவே-எழுந் தாடுமாம்
தீயவர் கூட்டமெல் லாம்.
தக்குத்தக் கென்றே அவர்-கதித் தாடுவார்
தம்மிரு தோள்கொட்டு வார்,
ஒக்குந் தருமனுக் கே-இஃதென்பர்,‘ஓ!
ஓ!’வென் றிரைந்திடு வார்;
கக்கக்கென் றேநகைப் பார்-துரியோ தனா
கட்டிக் கொள் எம்மை’என் பார்.

மாமனைத் ‘தூக்கா’யென் பார்-அந்த மாமன் மேல்
மாலை பலவீசு வார்,
சேமத் திரவியங் கள்-பல நாடுகள்
சேர்ந்ததி லொன்று மில்லை;

காமத் திரவிய மாம்-இந்தப் பெண்ணையும்
கைவச மாகச் செய் தான்;
மாமனொர் தெய்வ’மென்பார்;-துரியோ‘தனன்
வாழ்க’வென் றார்த்திடு வார்.
ADVERTISEMENTS
நின்று துரியோத னன்-அந்த மாமனை
நெஞ்சொடு சேரக் கசட்டி,
‘என்துயர் தீர்த்தா யடா!-உயிர் மாமனே!
ஏளனந் தீர்த்துவிட் டாய்.
அன்று நகைத்தா ளடா!-உயிர் மாமனே!
அவளைஎன் ஆளாக்கி னாய்.
என்றும் மறவே னடா!-உயிர் மாமனே!
என்ன கைம்மாறுசெய் வேன்?

‘ஆசை தணித்தா யடா!-உயிர் மாமனே!
ஆவியைக் காத்தா யடா!
பூசை புரிவோ மடா!-உயிர் மாமனே!
பொங்க லுனக்கிடு வோம்!
நாச மடைந்த தடா!-நெடு நாட் பகை,
நாமினி வாழ்ந்தோ மடா!
பேசவுந் தோன்று தில்லை;-உயிர் மாமனே!
பேரின்பங் கூட்டிவிட டாய்’

என்று பலசொல்லு வான்,-துரியோ தனன்
எண்ணி எண்ணிக்குதிப் பான்;
குன்று குதிப்பது போல்-துரியோ தனன்
கொட்டிக் குதித்தாடு வான்.
மன்று குழப்பமுற் றே,-அவர் யாவரும்
வகைதொகை யொன்று மின்றி
அன்று புரிந்ததெல் லாம்-என்தன் பாட்டிலே
ஆக்கல் எளிதாகு மோ?
வேறு

தருமம் அழிவெய்தச் சத்தியமும் பொய்யாக,
பெருமைத் தவங்கள் பெயர்கெட்டு மண்ணாக,
வானத்துத் தேவர் வயிற்றிலே துப்பாய்,
மோன முனிவர் முறைகெட்டுத் தாமயங்க,
வேதம் பொருளின்றி வேற்றுரையே யாகிவிட,

நாதங் குலைந்து நடுமையின்றிப் பாழாக,
கந்தருவ ரெல்லாங் களையிழக்கச் சித்தர்முதல்
அந்தரத்து வாழ்வோ ரனைவோரும் பித்துறவே,
நான்முகனார் நாவடைக்க,நாமகட்குப் புத்திகெட,
வான்முகிலைப் போன்றதொரு வண்ணத்திருமாலும்

அறிதுயில்போய் மற்றாங்கே ஆழ்ந்ததுயி லெய்திவிட
செறிதருநற் சீரழகு செல்வமெலாந் தானாகுஞ்
சீதேவி தன்வதன்ம செம்மைபோய்க் காரடைய,
மாதேவன் யோகம் மதிமயக்க மாகிவிட-
வாலை,உமா தேவி மாகாளி,வீறுடையாள்.

மூலமமா சக்தி,ஒரு மூவிலைவேல் கையறேறாள்,
மாயை தொலைக்கும் மஹாமாய தானாவாள்,
பேயைக் கொலையைப் பிணக்குவையைக் கண்டுவப்பாள்.

சிங்கத்தி லேறிச் சிரித்தெவையுங் காத்திடுவாள்,
நோவுங் கொலையும் நுவலொணாப் பீடைகளும்

சாவுஞ் சலிப்புமெனத் தான்பல் கணமுடையாள்,
கடாவெருமை ஏறுங் கருநிறத்துக் காலனார்
இடாது பணிசெய்ய இலங்குமஹா ராணி,
மங்களம் செல்வம் வளர்வாழ்நாள் நற்கீர்த்தி
துங்கமுறு கல்வியெனச் சூழும் பலகணத்தாள்.

ஆக்கந் தானாவாள்,அழிவுநிலை யாவாள்
போக்கு வரவெய்தும் புதுமையெலாந் தானாவாள்,
மாறிமாறிப் பின்னும் மாறிமாறிப் பின்னும்
மாறிமா றிப்போம் வழக்கமே தானாவாள்
ஆதி பராசக்தி-அவள்நெஞ்சம் வன்மையுறச்

சோதி கதிர்விடுக்கும் சூரியனாந் தெய்வத்தின்
முகத்தே இருள் படர-
ADVERTISEMENTS
மூடப் புலைமையினோன்

அகத்தே இருளுடையான், ஆரியரின் வேறானோன்,
துரியோதனனும் சுறுக்கெனவே தான்திரும்பி
அரியோன் விதுர னவனுக் குரைசெய்வான்:-

‘செல்வாய்,விதுரா!நீ சக்தித் திருப்பதேன்?
வில்வா ணுதலினாள்,மிக்க எழி லுடையாள்,
முன்னே பாஞ்சாலர் முடி வேந்தன் ஆவிமகள்,
இன்னேநாம் சூதில் எடுத்த விலைமகள்பால்
சென்றுவிளை வெல்லாஞ் செவ்வனே தானுணர்த்தி,

“மன்றினிடை யுள்ளான்நின் மைத்துனன்நின் ஓர் தலைவன்
நின்னை அழைக்கிறான் நீள்மனையில் ஏவலுக்கே”
என்ன உரைத்தவளை இங்கு கொணர் வாய்’ என்றான்.