முப்பெரும் பாடல்கள்

2. பாஞ்சாலி சபதம்

(இரண்டாம் பாகம்) அடிமைச் சருக்கம் 45. சஹாதேவனைப் பந்தயம் கூறுதல்
வேறு

எப்பொழு தும்பிர மத்திலே சிந்தை
ஏற்றி உலகமொ ராடல் போல்.எண்த்
தப்பின்றி இன்பங்கள் துய்த்திடும்-வகை
தானுணர்ந் தான்சஹ தேவானம்-எங்கம்
ஒப்பில் புலவனை ஆட்டத்தில்-வைத்தல்
உன்னித் தருமன் பணயமென்று -அங்குச்
செப்பினன் காயை உருட்டினார்-அங்குத்
தீய சகுனி கெலித்திட்டான்.
ADVERTISEMENTS
நகுலனை வைத்தும் இழந்திட்டான்;-அங்கு
நள்ளிருட் கண்ணொரு சிற்றொளி-வந்து
புகுவது போலவன் புந்தியில்‘என்ன
புன்மை செய்தோம்?’என எண்ணினான்-அவ்வெண்ணம்

மிகுவதன் முன்பு சகுனியும்-ஐய!
வேறோரு தாயிற் பிறந்தவர்-வைக்கத்
தகுவ ரென்றிந்தச் சிறுவரை-வைத்துத்
தாயத்தி லேஇழந் திட்டனை’.

‘திண்ணிய வீமனும் பார்த்தனும்-குந்தி
தேவியின் மக்களுனை யொத்தே-நின்னிற்
கண்ணியம் மிக்கவர் என்றவர்-தமைக்
காட்டுதற் கஞ்சினை போலும் நீ?”-என்று

புண்ணியமை மிக்க தருமனை-அந்தப்
புல்லன் வினவிய போதினில்,-தர்மன்
துண்ணென வெஞ்சின மெய்தியே,-அட!
சூதில் அரசிழந் தேகினும்.
‘எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம்;ஐவர்
எண்ணத்தில்,ஆவியில் ஒன்றுகாண்,-இவர்
பங்கமுற் றேபிரி வெய்துவார்-என்று
பாதகச் சிந்தனை கொள்கிறாய்;-அட!
சிங்க மறவர் தமக்குள்ளே-வில்லுத்
தேர்ச்சியி லேநிக ரற்றவன்,-எண்ணில்
இங்குப் புவித்தலம் ஏழையும்-விலை
யீடெனக் கொள்ளத் தகாதவன்.

‘கண்ணனுக் காருயிர்த் தோழனாம்-எங்கள்
கண்ணிலுஞ் சால இனியவன்,
வண்ணமும் திண்மையும் சோதியும்-பெற்று
வானத் தமரரைப் போன்றவன்-அவன்
எண்ணரு நற்குணஞ் சான்றவன்,-புக
ழேறும் விஜயன் பணயங் காண்!-பொய்யில்
பண்ணிய காயை உருட்டுவாய்’-என்று
பார்த்திவன் விம்மி உரைத்திட்டான்.

மாயத்தை யேஉரு வாக்கிய-அந்த
மாமனும் நெஞ்சில் மகிழ்வுற்றே கெட்ட
தாயத்தைக் கையினில் பற்றினான்;-கையில்
தாய முரடடி விழுத்தினான்;-அவன்
சாற்றிய தேவந்து வீழ்ந்ததால்,-வெறும்
ஈயத்தைப் பொன்னென்று காட்டுவார்-மன்னர்
இப்புவி மீதுள ராமன்றோ?

ADVERTISEMENTS
‘கொக்கரித் தார்த்து முழுங்கியே-களி
கூடிச் சகுனியுஞ் சொல்லுவான்,-‘எட்டுத்
திக்கனைத்தும் வென்ற பார்த்தனை-வென்று
தீர்த்தனம் வீமனைக் கூ’றென்றான்.தர்மன்
தக்கது செய்தல் மறந்தனன்,-உளஞ்
சார்ந்திடு வெஞ்சின வெள்ளத்தில்-எங்கும்
அக்கரை இக்கரை காண்கிலன்,-அறத்
தண்ணல் இதனை உரைக்கின்றான்;

‘ஐவர் தமக்கொர் தலைவனை-எங்கள்
ஆட்சிக்கு வேர்வலி அஃதினை,-ஒரு
தெய்வம்முன் னேநின் றெதிர்ப்பினும்-நின்று
சீறி அடிக்குந் திறலனை-நெடுங்
கைவளர் யானை பலவற்றின் வலி
காட்டும் பெரும்புகழ் வீமனை-உங்கள்
பொய்வளர் சூதினில் வைத்திட்டேன்-வென்று
போ’என் றுரைத்தனன் பொங்கியே.

போரினில் யானை விழக்கண்ட பல
பூதங்கள் நாய்நரி காகங்கள்-புலை
ஓரி கழுகென் றிவையெலாம்-தம
துள்ளங் களிகொண்டு விம்மல்போல்,-மிகச்
சீரிய வீமனைச் சூதினில் அந்தத்
தீயர் விழுந்திடக் காணலும்-நின்று
மார்பிலுந் தோளிலுங் கொட்டினார்-களி
மண்டிக் குதித்தெழுந் தாடுவார்.

மன்னவர்,தம்மை மறந்துபோய்,-வெறி
வாய்ந்த திருடரை யொத்தனர்,-அங்குச்
சின்னச் சனுனி சிரிப்புடன்-இன்னும்
செப்புக பந்தயம் வே’ றென்றான்-இவன்
தன்னை மறந்தவ னாதலால்-தன்னைத்
தான்பண யமென வைத்தனன்,-பின்பு
முன்னைக் கதையன்றி வேறுண்டோ?-அந்த
மோசக் சகுனி கெவிலத்தனன்.

ADVERTISEMENTS
பொங்கி யெழுந்து சுயோதனன்-அங்கு
பூதல மன்னர்க்குச் சொல்லுவான்;-ஒளி
மங்கி யழிந்தனர் பாண்டவர்;-புவி
மண்டலம் நம்ம தினிக்கண்டீர்,-இவ்
சங்கை யிலாத நிதியெல்லாம்-நம்மைச்
சார்ந்தது வாழ்த்துதிர் மன்னர்காள்!-இதை
எங்கும் பறையறை வாயடா-தம்பி!’
என்றது கேட்டுச் சகுனி தான்.