முப்பெரும் பாடல்கள்

2. பாஞ்சாலி சபதம்

(முதற் பாகம்)
என்று விதுரன் இயம்பத் தருமன்
எண்ணங் கலங்கிச் சிலசொல் உரைப்பான்;
‘மன்று புனைந்தது கேட்டுமிச் சூதின்
வார்த்தையைக் கேட்டுமிங் கென்தன் மனத்தே
சென்று வருத்தம் உளைகின்ற தையா!
சிந்தையில் ஐயம் விளைகின்ற தையா!
நன்று நமக்கு நினைப்பவ னல்லன்;
நம்ப லரிது சுயதனன் றன்னை.

‘கொல்லக் கருதிச் சுயோதனன் முன்பு
குத்திர மான சதிபல செய்தான்;
சொலலப் படாதவ னாலெமக் கான
துன்ப மனைத்தையும் நீ அறி யாயோ?
வெல்லகக் கடவர் எவரென்ற போதும்
வேந்தர்கள் சூதை விரும்பிட லாமோ?
தொல்லைப் படுமென் மனந்தெளி வெய்தக்
சொல்லுதி நீஒரு சூழ்ச்சிஇங்’ கென்றான்.
ADVERTISEMENTS
வேறுவிதுரனும் சொல்லு கிறான்;-இதை
விடமென்ச சான்றவர் வெகுளுவர் காண்;
சதுரெனக் கொள்ளுவ ரோ?-இதன்
தாழ்மை யெலாமவர்க் குரைத்து விட்டேன்;

இதுமிகத் தீதென் றே-அண்ணன்
எத்தனை சொல்லியும் இள வரசன்
மதுமிகுத் துண்டவன் போல்-ஒரு
வார்த்தையை யேபற்றிப் பிதற்றுகிறான்.

‘கல்லெனில் இணங்கி விடும்-அண்ணன்
காட்டிய நீதிகள் கணக்கில வாம்;
புல்லனிங் கவற்றை யெலாம்-உளம்
புகுதலொட் டாதுதன் மடமையினால்
சல்லியச் சூதினி லே-மனம்
தளர்வற நின்றிடுந் தகைமை சொன்னேன்;
சொல்லிய குறிப்பறிந் தே-நலந்
தோன்றிய வழியினைத் தொடர்க’என்றான்.
தருமனும் இவ்வ ளவில்-உளத்
தளர்ச்சியை நீக்கியொர் உறுதி கொண்டே
பருமங்கொள் குரலின னாய்-மொழி
பதைத்திட லின்றிஇங் கிவைஉரைப் பான்;
மருமங்கள் எவைசெயி னும்-மதி
மருண்டவர் விருந்தறஞ் சிதைத்திடி னும்,
கருமமொன் றேஉள தாம்-நங்கள்
கடன்;அதை நெறிப்பட புரிந்திடு வோம்.

‘தந்தையும் வரப்பணித் தான்;-சிறு
தந்தையும் தூதுவந் ததைஉரைத் தான்;
சிந்தை யொன்றினி இல்லை,-எது
சேரினும் நலமெனத் தெளிந்துவிட் டேன்;
முந்தையச் சிலைரா மன்-செய்த
முடிவினை நம்மவர் மறப்பது வோ?
நொந்தது செயமாட் டோம்;-பழ
நூலினுக் கிணங்கிய நெறிசெல் வோம்.

‘ஐம்பெருங் குரவோர் தாம்;-தரும்
ஆணையைக் கடப்பதும் அறநெறி யோ?
வெம்பொரு மத யானை -பரி
வியன்தேர் ஆளுடன் இருதினத் தில்
பைம்பொழில் அத்தி நகர்-செல்லும்
பயணத்திற் குரியன புரிந்திடு வாய்,
மொய்ம்புடை விறல் வீமா!’-என
மொழிந்தனன் அறநெறி முழுதுணர்ந் தான்.
ADVERTISEMENTS
வீமனும் திகைத்துவிட் டான்;-உள
விசயனை நோக்கிஇங் கிதுசொலு வான்;
‘மாமனும் மருகனு மா-நமை
மழிததிடக் கருதிஇவ் வழிதொடர்ந் தார்;
தாமதஞ் செய்வோ மோ?-செலத்
தகுந்தகு மெனஇடி யுறநகைத் தான்;
கோமகன் உரைப்படியே-படை
கொண்னடுசெல் வோமொரு தடையிலை காண்!

நெடுநாட் பகைகண் டாய்!-இந்த
நினைவினில் யான்கழித் தனபல நாள்;
கெடுநாள் வருமள வும்-ஒரு
கிருமியை அழிப்பவர் உலகிறுண்டோ,
படுநாட் குறி அன் றோ-இந்தப்
பாதகம் நினைப்பவர் நினைத்தது தான்
விடுநாண் கோத்திட டா!தம்பி!
வில்லினுக் கிரைமிக விளையு தடா!

‘போரிடச் செல்வ மடா!-மகன்
புலைமையும் தந்தையின் புலமைக ளும்
யாரிடம் அவிழ்க்கின் றார்?-இதை
எத்தனை நாள்வரை பொறுத்திருப் போம்?

பாரிடத் திவரொடு நாம்-எனப்
பகுதியிவ் விரண்டிற்கும் காலமொன் றில்
நேரிட வாழ்வுண் டோ?-இரு
நெருப்பினுக் கிடையினில் ஒருவிற கோ?’
வேறுவீமன் உரைத்தது போலவே-உளம்
வெம்பி நெடுவில் விசயனும்-அங்கு
காமனும் சாமனும் ஒப்பவே-நின்ற
காளை இளைஞர் இருவரும்-செய்ய
தாமரைக் கண்ணன் யுதிட்டிரன்- சொல்லைத்
தட்டிப் பணிவொடு பேசினார்;தவ
நேமந் தவறலும் உண்டுகாண்,-நரர்
நெஙசம் கொதித்திடு போழ்திலே.

அன்பும் பணிவும் உருகொண்டார்-அணு
வாயினும் தன்சொல் வழாதவர்-அங்கு
வுன்பு மெமாழிசொல்லக் கேட்டனன்;-அற
மன்னவன் புன்னகை பூத்தனன்;-அட!
முன்பு சுயோதனன் செய்ததும்-இன்று
மண்டிருக் குங்கொடுங்கோல மும்-இதன்
பின்பு விளைவதும் தேர்ந்துளேன்;-எனைப்
பித்தனென் றெண்ணி உரைத்திடீர்!

‘கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்-தன்
கணக்கிற் சுழன் றிடும் சக்கரம்-அது
தப்பி மிகையுங் குறையுமாச்-சுற்றும்
தன்மை அதற்குள தாகுமோ?-இதை
ஒப்பிட லாகும் புவியின்மேல்-என்றும்
உள்ள உயிர்களின் வாழ்விற்கே,-ஒரு
செப்பிடு வித்தையைப் போலவே-புவிச்
செய்திகள் தோன்றிடு மாயினும்,

‘இங்கிவை யாவுந் தவறிலா-விதி
ஏற்று நடக்குஞ் செயல்களாம்;-முடி
வெங்கணு மின்றி எவற்றினும்-என்றும்
ஏறி இடையின்றிச் செல்வதாம்-ஒரு
சங்கிலி யோக்கும் விதி கண்டீர்;-வெறுஞ்
சாத்திர மன்றிது சத்தியம்;-நின்று
மங்கியொர் நாளில் அழிவதாம்-நங்கள்
வாழ்க்கை இதனைக் கடந்ததோ?

“தோன்றி அழிவது வாழ்க்கைதான்;-இங்குத்
துன்பத்தொ டின்பம் வெறுமையாம்-இவை
மூன்றில் எதுவரு மாயினும்.-களி,
மூழ்கி நடத்தல் முறைகண்டீர்!-நெஞ்சில்
ஊன்றிய கொள்கை தழைப்பரோ,-துன்பம்
உற்றிடு மென்பதொர் அச்சத்தால்?-விதி
போன்று நடக்கும் உலகென்றே-கடன்
போற்றி ஒழுகுவர் சான்றவர்.

‘சேற்றில் உழலும் புழுவிற்கும்,-புவிச்
செல்வ முடைய அரசர்க்கும்.-பிச்சை
ஏற்றுடல் காத்திடும் ஏழைக்கும்,-உயிர்
எத்தனை உண்டவை யாவிற்கும்,-நித்தம்
ஆற்றுதற் குள்ள கடமைதான்-முன்வந்து
அவ்வக் கணந்தொறும் நிற்குமால்-அது
தோற்றும் பொழுதிற் புரிகுவார்-பல
சூழந்து கடமை அழிப்பரோ?

‘யாவருக் கும்பொது வாயினு-சிறப்
பென்பர் அரசர் குலத்திற்கே-உயர்
தேவரை யொப்ப முன்னோர் தமைத்-தங்கள்
சிந்தையிற் கொண்டு பணிகுதல்;-தந்தை
ஏவலை மைந்தர் புரிவதற்கே-வில்
இராமன் கதையையும் காட்டினேன்;-புவிக்
காவலர் தம்மிற் சிறந்தநீர்-இன்று
கர்மம் பிழைத்திடு வீர்கொலோ?’
ADVERTISEMENTS
வேறுஎன்றினைய நீதிபல தரும ராசன்
எடுத்துரைப்ப,இளைஞர்களுந் தங்கை கூப்பிக்
‘குன்றினிலே ஏற்றிவைத்த விளக்கைப் போலக்
குவலயத்திற் கறங்காட்டத் தோன்றி னாய் நீ!
வென் றிபெருந் திருவடியாய்!நினது சொல்லை
மீறிஒரு செயலுண்டோ? ஆண்டான் ஆணை
யன்றி அடி யார்தமக்குக் கடன்வே றுண்டோ?
ஐயனே! பாண்டவர்தம் ஆவி நீயே!

‘துன்பமுறும் எமக்கென்றே எண்ணி நின்வாய்ச்
சொல்லைமறுத் துரைத்தோமோ? நின்பா லுள்ள
அன்புமிகை யாலன்றே திருவு ளத்தின்
ஆக்கினையை எதிர்த்துரைத்தோம் அறிவில்லாமல்
மன்பதையின் உளச்செயல்கள் தெளியக் காணும்
மன்னவனே!மற்றதுநீ அறியா தொன்றோ?
வன்புமொழி பொறுத்தருள்வாய்,வாழி!நின்சொல்
வழிச்செல்வோம்,‘எனக்கூறிவணங்கிச் சென்றார்